close
Choose your channels

அரியவகை நோயால் பாதிப்பு: பிரபல நடிகர் கூறிய திடுக்கிடும் தகவல்

Wednesday, March 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாலிவுட் மட்டுமின்றி ஜூராசிக் பார்க் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் நடித்த திறமையான நடிகர்.

இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறி தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். கடந்த 15 தினங்களாக தனது வாழ்க்கை சஸ்பென்ஸ் ஆக ஓடிக்கொண்டிருப்பதாகவும், தனது உடல் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இர்பான் கூறியுள்ளார்.

தனது உறவினர்களும் நண்பர்களும் தனக்கு முழு ஆதரவாக இருப்பதாகவும் தனக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை நோய் என்னவென்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், அவ்வாறு உறுதி செய்யப்பட்டவுடன் முழு விபரங்களையும் ரசிகர்களுக்கு தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இர்பானின் இந்த பதிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவுசெய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment