ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ் குறித்த சர்ச்சை கருத்து.. பிரபல நடிகருக்கு குவியும் கண்டனங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில் அவருக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் அவர் ஏராளமான நபர்களுக்கு உதவி செய்தார் என்பதும் தெரிந்ததே. இந்த உதவி காரணமாக தான் அவருக்கு அகில இந்திய அளவில் மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது என்பதும் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கையும் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சோனு சூட் தனது சமூக வலைத்தளத்தில் ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ் உங்கள் வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய வரும்போது உங்கள் வீட்டில் வெளியே கழட்டி வைக்கப்பட்டிருந்த ஷூக்களை ஒருவேளை திருடினால், அவர்கள் மீது தயவுசெய்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம், அது மட்டும் இன்றி முடிந்தால் அவர்களுக்கு புதிய ஷூக்களை வாங்கி கொடுங்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஷூக்கள் மிகவும் தேவையான ஒன்று, கருணையுடன் நடந்து கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ள நிலையில் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ் மட்டுமல்ல, யார் திருடினாலும் அதை ஊக்குவிப்பது சரியானது அல்ல என்றும் ஏழ்மையானவர்களாக இருந்தாலும் திருடுவதை நியாயப்படுத்த கூடாது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ் தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்களை பார்த்தால் உங்களுக்கு ஷூ திருடுபவர்கள் போல் தெரிகிறதா? என்று அவர்களும் பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் சோனு சூட்டின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
If Swiggy’s delivery boy stole a pair of shoes while delivering food at someone’s house. Don’t take any action against him. In fact buy him a new pair of shoes. He might be really in need. Be kind ❤️🙏
— sonu sood (@SonuSood) April 12, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout