ஜூனியர் என்.டி.ஆர்- ஜான்வி கபூர் படத்தில் வில்லனாக நடிப்பவர் இந்த பிரபலமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
போனிகபூர் - ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் அறிமுகமாக இருக்கும் நிலையில் அதே படத்தில் பாலிவுட் பிரமுகர் ஒருவரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
போனிகபூர் - ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜூனியர் என்டிஆரின் 30வது திரைப்படமான இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதே படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயித் அலிகான் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனேகமாக அவர் இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்த படத்தின் வில்லன் கேரக்டருக்கு விஜய்சேதுபதி மற்றும் விக்ரம் பரிசீலிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது சயித் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீதேவி மற்றும் சயித் அலிகான் ஆகிய இருவருமே ஒரே படத்தில் தென்னிந்திய திரை உலகில் அறிமுகமாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி இந்த படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments