கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன் படத்தில் இணைந்த பாஜக எம்.பி

  • IndiaGlitz, [Saturday,February 13 2016]

'தூங்காவனம்' படத்தை அடுத்து கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக வந்த செய்தி உறுதியாகியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கமல்ஹாசனின் மகளாகவும், ரம்யா கிருஷ்ணன், மனைவியாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது பாலிவுட்டின் பிரபல நடிகர் பரேஷ் ராவல் (Paresh Rawal) இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் இந்தி மார்க்கெட்டுக்கு இவருடைய இணைப்பு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் மட்டுமின்றி கடந்த லோக்சபா தேர்தலில் அகமதாபாத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சோழர் கதையில் அஜித். உறுதி செய்தார் பாலகுமாரன்

அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்தது..

சமூக வலைத்தளங்களில் வலம் வரும் 6 வயது தனுஷ் போட்டோ

வெற்றிமாறனுடன் இணைந்து தனுஷ் தயாரித்த 'விசாரணை' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், தனுஷ் தற்போது 'கொடி' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்....

கோலிவுட் பேய்ப்படத்தில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை

தமிழ் திரையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேய்ப்பட சீசன் இருந்து வருகிறது. அறிமுக நடிகைகள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளான த்ரிஷா....

அஜித்தின் இடத்தை 15 வருடங்களுக்கு பின் பிடித்த பாபிசிம்ஹா

கடந்த 2001ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த 'சிட்டிசன்' படத்தில் மிகவும் பிரபலமான பிளாஷ்பேக் காட்சி திருவள்ளூர் அருகேயுள்ள புலிகட் என்ற பகுதியில் எடுக்கப்பட்டிருக்கும்.....

நாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள்

100 ஆண்டுகள் பழமையான தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி கடைசி வரை நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர்கள் ஒருசிலர் இருந்தபோதிலும் இவர்களில் பெரும்பாலானோர்...