'ராட்சசன்' இந்தி ரீமேக்கில் திடீர் மாற்றம்?

  • IndiaGlitz, [Monday,June 28 2021]

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ’ராட்சசன்’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று விஷ்ணு விஷாலுக்கு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் பட்டியலில் இடம் கிடைத்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே ஒரு சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தெலுங்கில் பெல்லம்கொண்டா சீனிவஸ், விஷ்ணுவிஷால் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹிந்தியில் இந்த படத்தை ரீமேக் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த்து. இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, விஷ்ணு விஷால் வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது

இந்த நிலையில் ’ராட்சசன்’ ஹிந்தி ரீமேக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன்படி ’ராட்சசன்’ ஹிந்தி ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானாவுக்கு பதிலாக அக்ஷய்குமார், விஷ்ணுவிஷால் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அதுமட்டுமன்றி அவரே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரபல பாலிவுட் இயக்குனர் ரமேஷ் வர்மா இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

'குக் வித் கோமாளி' பிரபலம் அஸ்வின் நடிக்கும் படத்தின் டைட்டில்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது, என்பதும் இந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும், இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் ஹாட்ஸ்டாரில் ரசிகர்கள் பார்த்து

பிக்பாஸ் நடிகருடன் செம குத்து டான்ஸ் ஆடும் சம்யுக்தா: வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்து கடந்த பல மாதங்கள் ஆனபின்னரும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்துக் கொண்டு தங்களது நட்பை புதுப்பித்து வருகின்றனர்

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் 4வது வில்லன் இந்த ஹீரோவா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை

இது தாயுள்ளமான திட்டம்....! கொச்சைப்படுத்தாதீங்க... கடுப்பான அமைச்சர்....!

கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, தாயுள்ளத்தோடு முதல்வர் முக.ஸ்டாலின் நிதியுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்

பெற்றோர்கள் தைரியமாக புகாரிக்கலாம்....! தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்...!

தனியார் பள்ளிகள் வாங்கும் வசூல் கட்டணம் குறித்து, பெற்றோர்கள் தாராளமாக முன்வந்து புகாரளிக்கலாம் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.