ரஜினியை அடுத்து 'மேன் Vs வைல்டு' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் மேன் Vs வைல்டு என்ற நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் அந்த நிகழ்ச்சிகள் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்
மேன் Vs வைல்டு என்ற நிகழ்ச்சியில் பிரபலங்களை காட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களின் அனுபவத்தை வீடியோவாக எடுத்து டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் என்பது தெரிந்தது. பியர் கிசில்ஸ் என்பவர் பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பதும் இந்தியாவை பொருத்தவரை பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் உள்பட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாலத்தீவு நாட்டில் உள்ள காட்டில் இந்த நிகழ்ச்சியின் படப்ப்பிடிப்பு நேற்று நடந்ததாகவும் இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் விதவிதமான விலங்குகள், பறவைகள், பாம்பு வகைகள் ஆகியவை இருக்கும் காட்டுக்குள் பிரபலங்கள் இணைந்து பயணம் செய்யும் திகில் காட்சிகளை மக்களுக்கு வழங்குவது என்பதாகும். தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் டப் செய்து ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com