close
Choose your channels

ஐஸ்வர்யாராயுடன் நடித்த 36 வயது நடிகர் திடீர் மரணம்

Sunday, July 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் திரையுலகில் கடந்த சில வாரங்களாக இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ஆகிய முக்கிய பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த 36 வயது நடிகர் ஒருவர் திடீரென மரணம் அடைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஐஸ்வர்யா ராயின் சராப்ஜித் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் ரஞ்சன் ஷேகல். இவர் பல பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராய் நடித்த சராப்ஜித் படத்திற்கு பின்னர் ஷாருக்கானுடன் ஜீரோ என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று அவருக்கு திடீரென உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ரஞ்சன் ஷேகல் மறைவை அடுத்து பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி டிவி சீரியல்களிலும் ரஞ்சன் ஷேகல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment