close
Choose your channels

வைரலாகும் பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ: டெலிட் செய்யுமாறு வேண்டுகோள்!

Saturday, August 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவரின் அந்தரங்க வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தயவு செய்து அந்த வீடியோவை டெலிட் செய்யுங்கள் என அந்த நடிகை தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபல போஜ்புரி நடிகை திரிஷா கார்மது. இவர் பல போஜ்புரி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக திடீரென திரிஷா கார்மதுவின் அந்தரங்க வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது ரசிகர்களுக்கு இது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னை வீழ்த்துவதற்காக யாரோ எனது தனிப்பட்ட வீடியோவை வைரல் செய்துள்ளனர். பீகாரில் இப்படிப்பட்ட கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைத்து கூட பார்த்தது இல்லை. நீங்கள் எனது உண்மையான ரசிகர்களாக இருந்தால் தயவு செய்து அந்த வீடியோவை டெலீட் செய்துவிடுங்கள். இதை நான் உங்களிடம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டிலும் தாய், சகோதரிகள் இருக்கிறார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று அவர் பதிவு செய்துள்ளார். இந்த உருக்கமான பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment