கொரோனாவுக்கு பலியான பிரபல நடிகை: அதிர்ச்சியில் திரையுலகம்

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக தமிழ் திரையுலகை பொறுத்தவரை இன்று ஒரே நாளில் ஒரு நடிகர் பாண்டு மற்றும் பாடகர் கோமகன் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பதும் சமீபத்தில் இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த் உள்பட ஒரு சிலர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி பிரபல நடிகை ஸ்ரீபிரதா கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இவர் ஹிந்தி மற்றும் போஜ்புரி திரைப்படங்களில் நடித்தவர் என்பதும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் பழம்பெரும் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா, கோவிந்தா, ராஜ் பாப்பர் உள்ளிட்டவர்களுடன் நடித்த ஸ்ரீப்ரதா தற்போது கொரோனாவுக்கு பலியாகியுள்ளதை அடுத்து பாலிவுட் திரையுலகம் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.

More News

சரவணன் -மீனாட்சி செந்தில் - ஸ்ரீஜா வீட்டில் சூப்பர் விசேஷம்: குவியும் வாழ்த்துக்கள்!

சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் புகழ் பெற்று தற்போது தொலைக்காட்சி தொடர்களின் முன்னணி நடிகராக இருக்கும் செந்தில் வீட்டில் சூப்பர் விசேஷம் ஒன்றும் நடந்துள்ள நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

பிக்பாஸ் யாஷிகாவின் முதல் பிகினி போஸ்: அள்ளும் லைக்ஸ்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பலர் திரையுலகிலும் பிரபலமாகி வரும் நிலையில் நடிகை யாஷிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான மனம் எது? பஞ்சதந்திரக் கதைகள்… கேட்டு மகிழுங்கள் ஆடியோ வடிவில்!

பஞ்சதந்திரக் கதைகள் என்று சொன்னாலே அதை குழந்தைகளுக்கானது எனப் பலரும் கருதுகின்றனர்.

தோல்வியை அடுத்து நடிகர் கமலின் அடுத்த கட்டம்? விளக்கும் விமர்சன வீடியோ!

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுப்பார் எனக் கருதப்பட்ட நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தற்போது தோல்வியைத் தழுவி இருக்கிறார்.

தமிழக தேர்தல் 2021....! திமுக முதல் நோட்டா வரை புள்ளி விவரங்கள்…ஓர் அலசல் !

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்-6 ஆம் தேதி  நடந்து முடிந்த நிலையில், மே-2-ஆம் நாள் தேர்தல் முடிவுகள் வெளியாகியது.