சென்னை போலீஸ் கமிஷனரிடம் 'போகன்' இயக்குனர் கொடுத்த புகார்
Thursday, October 20, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 'போகன்' படத்தை இயக்கி வரும் இயக்குனர் லட்சுமண் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த புகாரில் தான் இயக்கி வரும் 'போகன்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று அந்தோனி தாமஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாகவும், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தன்னுடைய தரப்பில் இருந்து எதிர்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் மீண்டும் தன் மீதும் தனது தயாரிப்பாளர்கள் மீது காவல்துறையினர்களிடம் பொய்யான புகார்களை அந்தோனி தாமஸ் அளித்து வருவதாகவும் அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் தனக்கும் தனது தயாரிப்பாளர்களின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவப்பெயர் ஏற்படுத்தி மன உளைச்சல் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.,
பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அந்தோணி தாஸ் அவர்களின் செயல்களை தடுத்து நிறுத்தி அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயக்குனர் லட்சுமண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்,.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment