இப்படியெல்லாம் பேசினால் எப்படி பெண்கள் இந்த துறையில் சாதிப்பார்கள் ?

  • IndiaGlitz, [Monday,March 25 2024]

 

பேஸ்புக், யூடியூப்,இண்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களை கொண்ட ,சமூக ஊடக செல்வாக்கு பெற்ற மற்றும் பாடிபில்டர் பிரியங்கா மஸ்தானி அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,

உண்மையில் என்னை விட எத்தனையோ நல்ல பாடிபில்டர் இருக்காங்க.ஆனால் அவர்தம் திறமையை வெளியில் கொண்டு வருவதில்லை..அதற்கு காரணமே இந்த மாதிரி நெகடிவ் கமெண்ட்ஸ் கொடுப்பவர்கள் தான்.இந்த துறையில் இருப்பதால் எனக்கு இதெல்லாம் பழகிப் போச்சு.ஆனால் எனக்கே சில கமெண்ட்ஸ் மனதை பாதிக்கும்.சாதாரணப் பெண்கள் என்ன செய்வார்கள்?இதற்கு பயந்தே வெளியில் வருவதில்லை.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டிலேயே விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் இந்த துறையில் பெண்கள் உள்ளார்கள்.மொத்தமாக என்னையும் சேர்த்து எட்டு பாடிபில்டர்கள் மட்டும் தான்.இந்த மாதிரியான கேலி கிண்டல்கள் தாழ்த்திப் பேசுவது.இப்படியெல்லாம் இருந்தால் எப்படி பெண்கள் இந்த துறையில் சாதிப்பார்கள்?

பாடிபில்டிங் துறையில் இரண்டு வகைகள் உள்ளன.ஒன்று பாடிபில்டர்.மற்றொன்று பெண் மாடல் தேகக்கூறு ஆகும்.பாடிபில்டிங் என்பது ஆண் தோள் அமைப்பு போல் இருக்கும்.பெண் மாடல் தேகக்கூறுவிற்கு உடல் வாகு நளினம் தான் முக்கியம்.இதில் நான் கலந்து கொண்டது ஜுனியர் வகை.

மிகவும் எளிமையாக பெயர் நியாபகம் வைத்து சொல்லும் அளவிற்கு தான் இந்த துறையில் பெண்கள் இருக்கின்றனர்.மற்றவர்களுக்கு நான் ஒரு உதாரணமாக விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதால் தான் இந்த பாடிபில்டர் துறையைத் தேர்ந்தெடுத்தேன்.

மேலும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கூட விழிப்புணர்வு இல்லாத ஆட்கள் எல்லாம் ட்ரோல் செய்து கொண்டிருக்கின்றனர்.மிஸ் இந்தியா மற்றும் மிஸ் தமிழ்நாடு இரண்டிற்கும் வித்தியாசமே தெரியாமல் மீம்ஸ் போடுகிறார்கள்.இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

இதில் வருத்தப்படக் கூடிய விஷயம் என்னவென்றால் சமீபத்தில் இந்தியா அளவில் ஒரு பாடிபில்டர் போட்டி நடைபெற்றது.அதுவும் சென்னையில் நடந்தது.அதில் ஒரு பெண் கூட தமிழ்நாடு சார்பாக போட்டியில் பங்குப்பெறவில்லை.இது நம்ம தமிழ்நாட்டுக்கே அசிங்கம்.

நான் இந்த துறையில் ஜெயிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு போகவில்லை.என்னால் முடிந்த அளவிற்கு தமிழ்நாடு சார்பாக நான் பங்கேற்றேன் என்ற பெயர் மட்டும் போதும் என்று நினைத்தேன்.இதில் என்னை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை.என்னை அசிங்கமாக திட்டாமல் இருந்தாலே போதும்.நான் இதற்கெல்லாம் கவலை படுகிற ஆளும் இல்லை.

இந்த சமூகத்தில் பெண்கள் என்றால் இதை தான் செய்ய வேண்டும் செய்ய கூடாது என்று ஒரு தீர்க்கமான மனநிலையோடு இருக்கிறார்கள்.இந்த மாதிரியான துறைக்கு பெண்கள் வந்தால் இவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.இதுக்கெல்லாம் நீ ஏன் வர்ற ? என்ற கேள்வி தான் எழுகிறது.

நான் வேறு ஒருவரின் பட்டத்தை ஒன்றும் பறிக்கவில்லை .என் திறமையை என்னால் முடிந்த வரை காட்டி தான் இந்த பட்டத்தைப் பெற்றேன்.இதற்காக பெருமை படுகிறேன் என பிரியங்கா மஸ்தானியின் உத்வேக பேச்சுக்களை மேலும் அறிய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.