பிரபல நடிகையை கொலை செய்து புதைத்தாரா காதலர்? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,April 02 2018]

பிரபல ஹாலிவுட் நடிகை அதியா ஷிபானியை அவரது காதலரே கொலை செய்து புதைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மாசிடோனியாவை சேர்ந்த 25 வயது நடிகை ஷிபானி, ஒருசில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருந்த அவருக்கு கிறிஸ்டோபர் என்ற காதலர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி முதல் திடீரென நடிகை அதியாவை காணவில்லை. இதுகுறித்து புகாரின் அடிப்படையில்  விசாரணை செய்த போலீசார் அவர் தங்கியிருந்த இடத்தில் இருந்து சுமார் 600 கிமீக்கும் அப்பால் இருந்த காட்டுப்பகுதியில் அவரது பிணத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதியாவின் உடலில் காயம் இருந்ததால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பார் என்பது உறுதியானது. இந்த நிலையில் அதியாவின் கொலைக்கு அவரது காதலர் கிறிஸ்டோபர் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் தாங்கள் இருவரும் காரில் சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அதியாவை பாதி வழியில் இறக்கிவிட்டு தான் மட்டும் சென்றுவிட்டதாக கிறிஸ்டோபர் கூறினார்.

மேலும் இதுகுறித்து விசாரணை செய்ய கிறிஸ்டோபரை காவல்நிலையம் அழைத்து செல்லும் வழியில் அவர் திடீரென துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

சிம்ரன், திரிஷா ஆகியோர் தான் என் ரோல் மாடல். விஜய் ஆண்டனி நாயகி

விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காளி'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

பயமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை: ரஜினியை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்புராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்

6 வருட சம்பளத்தை சச்சின் என்ன செய்தார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது.

சிஎஸ்கே அணிக்கு விக்னேஷ் சிவன் செய்த உதவி

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மீண்டும் களமிறங்கவுள்ள நிலையில்

கமல், ரஜினி உள்பட திரையுலகினர்களுக்கு ஸ்டெர்லைட் அளித்த விளக்கங்கள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் இரவும் பகலும் தீவிரமாக போராடி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகில் இருந்தும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன.