2வது மாடியில் கேட்பாரற்று 3 நாட்கள் கிடந்த தாயின் பிணம்: 4வது மாடியில் குடியிருந்த மகன் மீது வழக்கு

80 வயது தாயின் பிணம் மூன்று நாட்கள் கேட்பாரற்று இரண்டாவது மாடியில் இருந்த நிலையில், அதே அபார்ட்மெண்டில் நான்காவது மாடியில் குடியிருந்த அவரது மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த ஒரு அப்பார்ட்மெண்டில் இரண்டாவது மாடியில் தனியாக தாயும், நான்காவது மாடியில் அவரது மகன் குடும்பத்துடனும் வசித்து வந்தார்கள். இந்த நிலையில் இரண்டாவது மாடியிலிருந்த தாய் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நான்காவது மாடியில் இருந்த மகனிடம் கூறினார்கள். இதனை அடுத்து அவர் இரண்டாவது மாடியில் உள்ள தன்னுடைய தாயின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து, அவரது பிணம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து காவல்துறையினர் விரைந்து வந்து தாயின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர்களின் முதல்கட்ட விசாரணையில் 80 வயது பெண் இறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தாயின் பிணம் இரண்டாவது மாடியில் இருந்த போதும் நான்காவது மாடியில் இருந்த அவரது மகன் மூன்று நாட்களாக அவரைக் கவனிக்காமல் இருந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து டெல்லி மகளிர் நல ஆணையம் காவல்துறையினர்களிடம் மகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது மிகவும் சீரியசான விஷயம் என்றும், பெற்றோரை சரியாக கவனிக்காத பிரிவின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த மகன், ‘தான் தன்னுடைய சகோதரி வீட்டிற்கு சென்றதாகவும் அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்ததால் தனது தாயின் மரணம் தெரியாமல் போய் விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார் இருப்பினும் அவர் கூறியது உண்மைதானா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 

More News

'அர்ஜூன் ரெட்டி' பட நடிகை கொடுத்த பாலியல் புகார்: 'போக்கிரி' பட ஒளிப்பதிவாளர் கைது!

https://tamil.asianetnews.com/cinema/famous-camera-man-shyam-k-naidu-bail-cancel-after-sai-sudha-cheating-complaint-qcsd7r

இனிமே தா ஆட்டமே இருக்கு… WHO வின் புது எச்சரிக்கை!!!

கொரோனா வைரஸ் ஏற்டுத்திய தாக்கத்தால் உலகமே அரண்டு போயிருக்கிறது

இந்த விளம்பரத்தை எல்லாம் இந்திய மக்கள் எப்படி ஏத்துக்கிறாங்க??? கடுப்பான டேரன் சமி!!!

அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற இளைஞர் நிறவெறி காரணமாக உயிரிழந்தார்.

சாத்தான்குளம் சம்பவம் அரசாங்கத்தின் தவறல்ல: பாரதிராஜா அறிக்கை

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்துறையினரால் அடித்தே கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ரஜினி, கமல் உள்பட ஒட்டுமொத்த திரையுலகமும் குரல் கொடுத்துள்ள நிலையில்

மாஸ்க் அணிவதும் அணியாமல் இருப்பதும் அவருடைய விருப்பம்… கெத்துக் காட்டும் வெள்ளை மாளிகை!!!

கொரோனா நோய்த்தொற்று உலக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி, முறையான சிகிச்சை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.