ஸ்ரீதேவி உடல் இந்தியா வர தாமதம் ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று முன் தினம் இரவு துபாயில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு இந்திய திரையுலகையே உலுக்கியது. இந்த நிலையில் நேற்று மாலையே ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வர, தொழிலதிபர் அனில் அம்பானியின் விமானம் துபாய் சென்றது. ஆனால் அவரது உடல் இன்று மதியம் தான் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
துபாய் நாட்டின் சட்டவிதிகளின்படி ஸ்ரீதேவியின் உடலுக்கு மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அதன் பின்னர் அவரது உடல் தற்போது துபாய் தலைமை காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்ரீதேவியின் உடல் குறித்த பிரேதபரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் விசாரணை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இந்தியாவுக்கு ஸ்ரீதேவியின் உடல் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவரது குடும்பத்தினருக்கு செய்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் நவ்தீப்சிங் சூரி தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments