ஸ்ரீதேவி உடல் இந்தியா வர தாமதம் ஏன்?

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று முன் தினம் இரவு துபாயில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு இந்திய திரையுலகையே உலுக்கியது. இந்த நிலையில் நேற்று மாலையே ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வர, தொழிலதிபர் அனில் அம்பானியின் விமானம் துபாய் சென்றது. ஆனால் அவரது உடல் இன்று மதியம் தான் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

துபாய் நாட்டின் சட்டவிதிகளின்படி ஸ்ரீதேவியின் உடலுக்கு மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அதன் பின்னர் அவரது உடல் தற்போது துபாய் தலைமை காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்ரீதேவியின் உடல் குறித்த பிரேதபரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் விசாரணை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இந்தியாவுக்கு ஸ்ரீதேவியின் உடல் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்‌கு தேவையான அனைத்து உதவிகளையும் அவரது குடும்பத்தினருக்கு செய்து வருவதாக ஐக்கிய அரபு ‌அமீரகத்திற்‌கான இந்தியத் தூதர் நவ்தீப்சிங் சூரி தெரிவித்துள்ளார்.

More News

என் கனவு பாத்திரம் 'மயிலு'க்கு உயிர் கொடுத்தவர் ஸ்ரீதேவி: பாரதிராஜா

16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் என இரண்டு ஸ்ரீதேவி நடித்த படங்களை இயக்கிய பாரதிராஜா, அவருடனான தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:

ஸ்ரீதேவியின் மலரும் நினைவுகள் குறித்து சிவகுமார்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு இந்தியாவில் உள்ள திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ஸ்ரீதேவியுடன் மூன்று படங்கள் நடித்த பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவரது மறைவு குறித்து கூறியதாவது:

நான் இரண்டுவிதமான ஸ்ரீதேவியை பார்த்துள்ளேன் ரஜினிகாந்த் பேட்டி

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு தனது டுவிட்டரில் ரஜினிகாந்த் இரங்கலை தெரிவித்திருந்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.

ஸ்ரீதேவி மரணம்: தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பதாவது…

கடவுளை புரூஸ்லி இரண்டு குத்துக்கள் விட வேண்டும்: ராம்கோபால் வர்மா

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.