close
Choose your channels

பாபிசிம்ஹாவின் 'கோ 2' ரன்னிங் டைம்

Thursday, May 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ஜிகர்தண்டா' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹாவின் அடுத்த படமான 'கோ 2' நாளை பிரமாண்டமாக தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. தேர்தல் சமயத்தில் வரும் அரசியல் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'கோ 2' திரைப்படம் மொத்தம் 124 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 4 நிமிடங்கள் ஓடுகின்றது. படத்திற்கு தேவையான காட்சிகள் மட்டுமே உள்ளதால் அளவு குறைந்த படமாக உள்ளதாகவும், அதே நேரத்தில் படம் முழுவதும் விறுவிறுப்பான காட்சிகள் அடங்கிய படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாபிசிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனர் சக்ரி டோலட்டியின் உதவியாளர் சரத் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தெலுங்கில் வெளியான அரசியல் த்ரில்லார் படமான 'பிரதிநிதி' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment