தப்பிப் பிழைத்தது பாபிசிம்ஹா படம்

  • IndiaGlitz, [Sunday,May 08 2016]

ஜிகர்தண்டா' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவாகி வருகிறார். ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் பாபிசிம்ஹா, நடித்த படங்களில் ஒன்று 'மெட்ரோ'.
பாபிசிம்ஹா, சிரிஷ், செண்ட்ராயன், சத்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை அனந்தகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்றபோது இந்த படத்தில் மிக அதிகளவில் வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கொடுக்க சென்சார் அலுவலக அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு இந்த படத்தை அனுப்பினர். ரிவைசிங் கமிட்டியில் இந்த படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் கொடுத்து படத்தை வெளியிட அனுமதித்துள்ளனர். இதனால் 'மெட்ரோ' படம் பெரிய ஆபத்தில் இருந்து தப்பி பிழைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜெயம் ரவிக்காக குதிரை சவாரி செய்யும் ராம்சரண் தேஜா

கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'ஜெயம்' சகோதரர்களின் 'தனி ஒருவன்' என்பது அனைவரும் அறிந்ததே....

'விஜய் 60' திருநெல்வேலி பின்னணியை கொண்ட படமா? புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் வசூல் தெறிக்க வைத்தது என்பது உலகமே அறிந்ததுதான்....

ரஜினியின் '2.0' படத்துடன் கனெக்ஷன் ஆன ஜி.வி.பிரகாஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற வசனமான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற டைட்டிலில் ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களை ரஜினி ...

விஷாலுக்கு நன்றி தெரிவித்த டிசம்பர் 3 இயக்கத்தினர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 3 இயக்கத்தினர்களுடன் இணைந்து சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்...

ஆபத்தை துணிச்சலுடன் எதிர்நோக்கும் நயன்தாரா

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நயன்தாராவின் அபரீதமான வளர்ச்சிக்கு அவருடைய தொழில்பக்திதான்...