பிரபல தமிழ்ப்பட நடிகருக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Tuesday,November 12 2019]

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக புரமோஷன் பெற்ற பல நடிகர்களில் ஒருவர் பாபிசிம்ஹா. பீட்சா, சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா, சாமி 2 உட்பட பல திரைப்படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்த பாபி சிம்ஹா, அதன் பின்னர் ஒரு சில திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாபி சிம்ஹா கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை ரேஷ்மி மேனனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பாபி சிம்ஹா - ரேஷ்மா தம்பதிக்கு நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் சேயும் நலம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பாபிசிம்ஹாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை அடுத்து அவருக்கு திரையுலகினர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.