பாபிசிம்ஹாவின் 'கோ 2' திரை முன்னோட்டம்.
Thursday, May 12, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2011ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதே தயாரிப்பாளர் தயாரித்த படம்தான் 'கோ 2'.
கமல்ஹாசனின் 'உன்னைப்போல் ஒருவன்' மற்றும் அஜித்தின் 'பில்லா 2' ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சக்ரிடோலட்டியிடம் உதவியாளராக இருந்த சரத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா மற்றும் 'டார்லிங்' நாயகி நிக்கி கல்ராணி ஆகிய இருவருமே பத்திரிகையாளர்களாக இந்த படத்தில் நடித்துள்ளனர். இதன் முதல் பாகத்தில் ஜீவா மற்றும் கார்த்திகா பத்திரிகையாளர்களாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசால்ட்டாக ஊதித்தள்ளிவிடும் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முதலமைச்சர் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் சப்போர்ட்டிங் கேரக்டர்களாக பாலசரவணன், இளவரசு, ஜான் விஜய், கருணாகரன், மயில்சாமி உள்பட பலரும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நாசரும் நடித்துள்ளனர்.
ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 2' படத்தில் இரண்டு பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்த லியோ ஜேம்ஸ் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். இவருடைய இசையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே நல்ல ஹிட் ஆகியுள்ளது. குறிப்பாக சின்மயி பாடிய கண்ணம்மா என்ற பாடல் அனைத்து எப்.எம் வானொலிகளிலும் தினசரி ஒலித்து கொண்டே இருக்கின்றது.
பத்திரிகையாளரான பாபிசிம்ஹா ஒரு முக்கிய பிரச்சனைக்காக முதலமைச்சரை கடத்தி வைத்துக்கொண்டு அரசுக்கு கோரிக்கை விடும் கதைதான் 'கோ 2' என கூறப்படுகிறது. தேர்தலுக்கு மூன்று நாட்கள் உள்ள நிலையில் அரசியல் கலந்த த்ரில் படமாக இந்த படம் வெளியாவதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ரிசர்வேஷனும் அதை உறுதி செய்துள்ளது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை நாளைய திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments