கமல்ஹாசனுடன் இணைகிறார் பாபிசிம்ஹா

  • IndiaGlitz, [Friday,July 03 2015]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' வெளியாகி கிட்டத்தட்ட ஒரே மாத இடைவெளியில் மீண்டும் ஒரு கமல் படம் வெளியாவதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் இந்த படம் மலையாளம் உள்பட அனைத்து முக்கிய மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதாலும், இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கவுதமி ரீ எண்ட்ரி ஆகியிருப்பதாலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன், கவுதமி, ஆஷா ஷரத், நிவேதா தாமஸ், எஸ்தர் அனில், எம்.எஸ். பாஸ்கர், சார்லி, டெல்லி கணேஷ், 'கோலிசோடா' ஸ்ரீராம் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரபல நடிகை ஸ்ரீப்ரியா தயாரித்துள்ள இந்த படத்தில் மலையாளத்தில் 'த்ரிஷ்யம்' படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளர். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் மற்றொரு எழுத்தாளர் சுகா இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு நெல்லை தமிழை கற்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று வெளியாகவுள்ள 'பாபநாசம்' படத்துடன் பாபிசிம்ஹா நடித்த 'கோ 2' படத்தின் மோஷன் போஸ்டர் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். சமீபத்தில் 'கோ 2' படத்தின் மோஷன் போஸ்டர் இணையதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.