பாபிசிம்ஹாவின் 'கோ 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,September 03 2015]

ஜீவா, கார்த்திகா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கோ' திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இந்த படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தற்போது 'கோ 2' என்ற படத்தை தயாரித்துள்ளது. தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், 'டார்லிங்' நாயகி நிகில்கல்ராணி, பாலாசரவணன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சரத் இயக்கியுள்ளார். 'காஞ்சனா 2' இசையமைப்பாளர்களில் ஒருவரான லியான் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த படம் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் என கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் உலா வந்த நிலையில் தயாரிப்பாளர் எல்ரெட்குமார் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி மற்றும் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

இதன்படி இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி வரும் அக்டோபர் 1ஆம் தேதியும், ரிலீஸ் தேதி அக்டோபர் 21ஆம் தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாலிட்டிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீயான் விக்ரம், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள '10 எண்றதுக்குள்ள' படமும் இதே அக்டோபர் 21ஆம் தேதிதான் ரிலீஸாகும் என ஏற்கனவே தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தூங்காவனம்' டிரைலர் ரிலீஸ் தேதி. கவுதமி அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

அஜீத் 56 படத்தின் மாஸ் டைட்டில்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' என்று அழைக்கப்படும் திரைப்படத்திற்கு இன்னும்...

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் கவுண்டமணி?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன், பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது...

சுந்தர் சியின் அரண்மனையை கைப்பற்றிய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்?

மறைந்த பிரபல இயக்குனர் இராம.நாராயணன் ஆரம்பித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்தும்...

விஜய்-அஜீத்-பவன்கல்யாண். சுசீந்திரனின் அடுத்த ஹீரோ யார்?

விஷால்-காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'பாயும் புலி