பாபிசிம்ஹா-கீர்த்திசுரேஷின் 'பாம்பு சட்டை' லேட்டஸ்ட் அப்டேட்

  • IndiaGlitz, [Friday,October 14 2016]

இயக்குனர் மற்றும் காமெடி நடிகரான மனோபாலா தயாரித்த முதல் படமான 'சதுரங்க வேட்டை' ஒரு நல்ல மெசேஜ் உடன் கூடிய வெற்றிப் படமாக அமைந்த நிலையில் அவர் தயாரித்த இரண்டாவது படமான 'பாம்புச்சட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
பாபிசிம்ஹா, கீர்த்திசுரேஷ், மொட்டை ராஜேந்திரன், சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆதம் தாசன் இயக்கியுள்ளார். அஜேஷ் இசையில், வெங்கடேஷ் ஒளிப்பதிவில், ராஜாசேதுபதி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷாலின் 'கத்திச்சண்டை' டீசர் விமர்சனம்

விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கியுள்ள 'கத்திச்சண்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனை தெளிவாக்கிய ரஜினியின் அட்வைஸ்

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்தின் வசூல் சாதனை ஏற்படுத்திய பரபரப்பை விட நன்றி விழாவில் அவர் சிந்திய கண்ணீர் கோலிவுட் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம்ரவியின் 'டிக் டிக் டிக்' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

ஜெயம் ரவி நடித்து வந்த 'போகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில்

'அஜித் 57' படத்தின் முக்கிய பணி முடிந்தது

தல அஜித் நடித்து வரும் 'அஜித் 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது என்பதையும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது...

விஜய், அஜித்துடன் இணைந்தார் மகேஷ்பாபு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் டீசர் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...