கீர்த்தி சுரேஷ் படத்தை வெகுவாகப் பாராட்டிய சென்சார் குழு
Send us your feedback to audioarticles@vaarta.com
பாபி சிம்ஹா-கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் பாம்பு சட்டை`. அறிமுக இயக்குனர் ஆடம்ஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா தயாரித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாம்பு சட்டை` இப்போது வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. சில காரணங்களால் நின்றுபோன படப்பிடிப்பு சில மாதங்களுக்கு மீண்டும் தொடங்கி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பாம்பு சட்டை` படம் தணிக்கை (சென்ஸார்) அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது. படம் பார்த்த தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் வழங்கியிருப்பதோடு படத்தை வெகுவாகப் பாராட்டியதாக, தயாரிப்பாளர் மனோபாலா அறிவித்துள்ளார்.
விரைவில் பாம்பு சட்டை` படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments