close
Choose your channels

மனோபாலாவின் 'பாம்பு சட்டை' வியாபாரம்

Monday, October 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனரும், காமெடி நடிகருமான மனோபாலா, 'சதுரங்க வேட்டை' என்ற படத்தை முதன்முதலில் தயாரித்து தானும் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர் என்பதை நிரூபித்தார். இந்நிலையில் அவர் தயாரித்த இரண்டாவது படமான 'பாம்பு சட்டை' படத்தின் வியாபாரம் தற்போது முடிவடைந்துள்ளது.
தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா, இளம் வெற்றி நாயகி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கே.கங்காதரன் அவர்களின் சினிமா சிட்டி நிறுவனமும், அபினேஷ் இளங்கோவன் அவர்களின் அபி அண்ட் அபி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து பெற்றுள்ளன.
இந்த படம் குறித்து கங்காதரன் கூறியபோது, 'இந்த படத்தை பார்த்ததும் அறிமுக இயக்குனர் ஆதம் தாசன் அவர்களின் கடினமான உழைப்பை ஒவ்வொரு ஃபிரேமிலும் பார்த்து அதிசயித்தேன். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அரிவிக்கவுள்ளேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் மனோபாலா தயாரிக்கவுள்ள அடுத்த படமான 'சதுரங்க வேட்டை 2' படத்தில் அரவிந்தசாமி, த்ரிஷா நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment