close
Choose your channels

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற நடிகர்

Sunday, May 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதேபோல் அவர் நடித்து முடித்த இன்னொரு திரைப்படமான '2.0' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான நடிகரும், தேசிய விருது பெற்றவருமான நடிகர் பாபிசிம்ஹா இந்த படத்தில் தற்போது இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதியை அடுத்து பாபிசிம்ஹாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'மெர்க்குரி' திரைப்படத்தில் நடித்த சனத் ரெட்டியும் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment