'இந்தியன் 2' படத்தின் வில்லனாகும் பிரபல தமிழ் ஹீரோ

  • IndiaGlitz, [Friday,August 09 2019]

கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் கடந்த சில நாட்களாக புதிய நட்சத்திரங்கள் இணைந்து வருகின்றனர்.

சமீபத்தில் 'இந்தியன் 2' படத்தில் பிரியா பவானிசங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரித்திசிங் உள்பட ஒருசில பெரிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகர் பாபிசிம்ஹா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பாபிசிம்ஹா இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. இந்த படத்தின் வில்லன் கேரக்டருக்கு ஏற்கனவே அர்ஜூன், அஜய்தேவ்கான் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. பாபிசிம்ஹா தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரண்டுவிதமான கேரக்டர்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

அனிருத் இசையில் ரத்தினவேலு ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

'நடிகையர் திலகம்' கீர்த்திசுரேஷூக்கு தேசிய விருது! திரையுலகினர் வாழ்த்து

'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷூக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது

வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி

வேலூர் மக்களவை தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தன.

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'பட்டாஸ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திருமணம் குறித்து தமன்னாவின் அறிவிப்பு

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நடித்த 'கண்ணே கலைமானே' மற்றும் 'தேவி 2' ஆகிய இரண்டு தமிழ்ப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகின

'ஜாக்பாட்' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகை!

இயக்குனர் கல்யாண் இயக்கிய 'குலேபகாவலி' படத்தை அடுத்து அவர் இயக்கிய 'ஜாக்பாட்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஜோதிகா நடித்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனம்