'ஜிகிர்தண்டா' கேரக்டரில் மீண்டும் பாபிசிம்ஹா?
Send us your feedback to audioarticles@vaarta.com
'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் அறிமுகமாகி சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து கொண்டிருந்த பாபிசிம்ஹாவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த படம் 'ஜிகிர்தண்டா' இந்த படத்தில் அவர் கேங்ஸ்டார் தலைவராக நடித்திருந்த கேரக்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பின்னர் பாபிசிம்ஹா, பல படங்களில் ஹீரோவாகவும், இரண்டாவது ஹீரோவாகவும் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் கேங்ஸ்டாராக நடித்துக் கொண்டிருக்கின்றார்.
விதார்த் நடித்த 'ஆள்' படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்த புதிய படத்திற்கு 'மெட்ரோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிரிஷ் மற்றும் சென்ட்ராயன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படம் குறித்து இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் கூறியபோது, 'தற்போது பாபிசிம்ஹா பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும், இந்த படத்தின் கேரக்டருக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என நான் எடுத்து கூறியதை புரிந்து கொண்டு நடித்து வருகிறார். பாபிசிம்ஹா இந்த படத்தில் 'குணா' என்ற கேங்ஸ்டார் கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் 'பணம் இருக்குறவன் கிட்டதான் இந்த உலகம் அடிமையா இருக்கும். நீ அடிமையா இருக்க போறயா? இல்ல அடிமையா ஆக்கப் போறியா' என்ற பஞ்ச் டயலாக்கும் பாபிசிம்ஹாவுக்கு உண்டு' என்று கூறினார்.
'ஜிகிர்தண்டா' படத்தில் கேங்ஸ்டார் கேரக்டரில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹாவுக்கு இந்த படத்திற்காகவும் கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்' என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments