புளூவேல் கேமிற்கு அடிமையானது எப்படி? ஒரு இளைஞரின் திடுக்கிடும் அனுபவங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஷ்யாவின் புளூவேல் விளையாட்டுக்கு உலகெங்கும் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் பலர் அடிமையாகி ஒருசிலர் தற்கொலை செய்து கொள்ளும் துர்பாக்கிய சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் என்ற பகுதியில் புளூவேல் விளையாட்டுக்கு அடிமையான அலெக்ஸாண்டர் என்ற 23 வயது இளைஞரை போலீசார் மீட்டுள்ளனர்.
காரைக்கால் அருகில் உள்ள நிரவி என்ற பகுதியில் தனது மூத்த சகோதரர் புளூவேல் கேமிற்கு அடிமையாகி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என ஒரு இளைஞர் காவல்துறையினர்களிடம் தெரிவித்ததை அடுத்து உடனடியாக காவல்துறையினர் அந்த இளைஞரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போது அலெக்ஸாண்டர் தான் புளூவேல் கேமை விளையாடியதாக ஒப்புக்கொண்டு அதன் விபரீதத்தை புரிந்து கொண்டு இனிமேல் விளையாட மாட்டேன் என்று உறுதி கூறினார். பின்னர் தான் எப்படி இந்த விளையாட்டுக்கு அடிமையானேன் என்பது குறித்து அவர் விளக்கினார்.
புளூவேல் கேம் என்பது ஒரு செயலியோ அல்லது இணையதளங்களிலோ இல்லை. அது ஒரு லிங்க் மட்டுமே. வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் நண்பர்களின் மூலம் இந்த லிங் எனக்கு வந்தது.
முதலில் சில டாஸ்க்குகள் சாதாரணமாக போகும். குறிப்பாக நம்முடைய பர்சனல் விபரங்களை அதாவது பெயர், போட்டோ, இமெயில் ஐடி, பாஸ்வேர்ட் ஆகியவைகள் கொடுக்க வேண்டும். இந்த கேமில் நள்ளிரவு 2 மணிக்கு மேல்தான் டாஸ்க் கொடுக்கப்படும். பேய்ப்படத்தை தனியாக பார்ப்பது, கடல், ஏரி, சுடுகாடு போன்ற பகுதிக்கு நள்ளிரவில் சென்று செல்பி எடுப்பது போன்ற டாஸ்குகள் முதலில் வரும்
அதன்பின்னர் புளூவேல் திமிங்கலம், மீன் போன்றவற்றை பிளேடு அல்லது கத்தியால் கையில் வரைந்து அதை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். ஒரு டாஸ்க்கை முடித்த பின்னர்தான் அடுத்த டாஸ்க் வரும். இந்த நிலையில் இருந்தபோதுதான் என்னை போலீசார் மீட்டனர். இந்த விளையாட்டின் விபரீதத்தை போலீசாரால் நான் புரிந்து கொண்டேன். இனிமேல் இந்த விளையாட்டை விளையாட மாட்டேன். மற்றவர்களையும் இந்த விளையாட்டை விளையாட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments