கடைசி வரைக்கும் புளுசட்டை மாறனை காணவில்லை: 'ஆன்ட்டி இந்தியன்' டிரைலர்!

  • IndiaGlitz, [Friday,October 08 2021]

திரைப்பட விமர்சகர் புளுசட்டை மாறன் நடித்து இயக்கிய ’ஆன்ட்டி இந்தியன்’ என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது

ஒரு ஊரில் பிரபலம் ஒருவரின் மரணம் ஏற்படுகையில் அந்த பிரபலத்தின் பிணத்தை இந்து முறைப்படி அடக்கம் செய்வதா? முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்வதா? அல்லது கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்வதா? என்ற குழப்பம் ஏற்படுகிறது.

மூன்று மதத்தின் தலைவர்களும் தங்கள் மதத்தின் படி தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர். இது குறித்த பிரச்சனைக்கு என்ன முடிவு என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது டிரைலரில் தெரிகிறது

இதில் இறந்த பிரபலமாக ப்ளூசட்டை மாறன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரெய்லர் 2 நிமிடத்திற்கு மேல் ஓடினாலும் இதில் ஒரு காட்சியில் கூட அவரது முகம் தெரியவில்லை என்பதும், படம் முழுவதும் அவர் பிணமாகவே நடித்திருக்கின்றார் என்பதும் இந்த டிரைலரின் சிறப்பாக கருதப்படுகிறது

’அவரு 25 வருஷமா இதோ வர்றேன், அதோ வர்றேன்னு சொல்லி அவரு ரசிகர்களையே ஏமாற்றி வருகிறார்’, மதத்தை நம்புறவன் யாரும் கோவிச்சுக்க மாட்டான், மதத்தை நம்பி பொழப்பு நடத்துறான் பாத்தியா அவன் தான் கோவிச்சுப்பான்’ போன்ற சில அரசியல் பஞ்ச்களும் இந்த டிரைலரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் திரையுலகில் ஒரு வித்தியாசமான படமாக இந்த ’ஆன்ட்டி இந்தியன்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு தான் இந்த படம் மக்களை கவருமா என்பதை கூற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.