புளூசட்டை மாறனின் 'ஆன்ட்டி இந்தியன்' படத்தின் சென்சார் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறன் இயக்கிய ’ஆன்ட்டி இந்தியன்’ என்ற திரைப்படம் சென்சாரில் சான்றிதழ் பெற முடியாமல் சிக்கலில் இருந்ததாகவும், இதனை அடுத்து அவர் இந்த படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியானது.
மேலும் இந்த படத்திற்கு 38 கட்கள் செய்யப்பட வேண்டும் என்றும், டைட்டிலையும் மாற்ற வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே ’யுஏ’ சான்றிதழ் தருவதாக சென்சார் அதிகாரி கூறியதாக தகவல் வெளியானதும்.
இதனால் ’ஆன்ட்டி இந்தியன்’திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற முடியாத நிலை இருந்ததாகவும் ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி உள்ளது. சற்றுமுன் கிடைத்த தகவலின்படி ’ஆன்ட்டி இந்தியன்’ திரைப் படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் கிடைத்து விட்டதாகவும் படத்தில் பெரிதாக கட் ஏதுமில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments