புளூசட்டை மாறனின் முதல் படம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,October 22 2019]

ஆன்லைன் சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கின்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர். இருப்பினும் இந்த படத்தில் நரேன், ராதாரவி, உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் புதுமுகங்கள் என கூறப்படுகிறது.

அஜித், விஜய் படங்கள் உள்பட பெரிய நடிகர்கள் முதல் சின்ன பட்ஜெட் படங்கள் வரை கடுமையாக விமர்சனம் செய்தவர் புளூ சட்டை மாறன். அவர் இயக்கும் படத்திற்கு என்னவிதமான விமர்சனம் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.