வெள்ளமாக ஓடிய ரெட் ஒயின்… வீடியோவை பார்த்து ஆதங்கப்படும் குடிமகன்கள்… வைரல் தகவல்!!!
- IndiaGlitz, [Monday,September 28 2020]
கொரோனா ஊரடங்கு காரணமாக நம்ம ஊரு ஒயின்ஷாப்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக மூடிக்கிடந்தது. அந்நிலையில் குடிமகன்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை திருப்தி படுத்த சிலர் கள்ளச்சாராய உற்பத்தியைத் தொடங்கி அதனால் போலீசில் மாட்டிக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி மது கிடைக்காமல் போனால் என்னவாகும் என்பதை நம்ம ஊரு குடிமகன்கள் நன்கு உணர்ந்திருக்கும் நிலையில் அவர்களை எல்லாம் அதிர்ச்சி ஆழ்த்தும் ஒரு பெரிய சம்பவம் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று இருக்கிறது.
அந்நாட்டில் உள்ள ஒயின் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த சேமிக்கு கிடங்கில் இருந்து டன் கணக்கான ஒயின் சாறு வழிந்து ஓடி அத்தொழிற்சாலை முழுவதும் வெள்ளக்கடாக மாறியச் சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்திருக்கிறது. காரணம் ஒயின் என்றாலே ஒரு அலாதியான அனுபவம் என்று சொல்வோர் பலர் இருக்கின்றனர். இதில் போதை தரும் ரகம், போதை தராத ரகம் எனப் பலரும் திராட்சை ரசத்தை விரும்பி சாப்பிடுவது உண்டு.
இந்நிலையில் சேமிப்பு கேலனில் இருந்து 1 லட்சம் லிட்டர் ஒயின் கசிந்து இருக்கலாம் எனவும் கணிக்கப் பட்டுள்ளது. மெட்டலால் செய்யப்பட்ட இந்த கேலனில் இருந்து எப்படி ஒயின் கசிந்தது என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில் அதுகுறித்த விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 1969 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் வில்லாமாலியா பகுதியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு 1570 ஹெக்டேர் பரப்பளவில் திராட்சை தோட்டங்களும் இருக்கிறதாம். இந்தத் தோட்டத்தில் தயாரிக்கப்பட்ட திராட்சைப் பழங்களைக் கொண்டே ஒயின் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் சேமிப்பு கிடங்கில் இருந்து கசிந்து ஓடும் ஒயினைப் பார்த்த ஒரு தொழிலாளி அதை எப்படி தடுத்து நிறுத்துவது எனத் தெரியாமல் வீடியோவாக எடுத்திருக்கிறார். இந்த வீடியோ கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி அந்நாட்டின் உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி இருக்கிறது. மேலும் இதுவரை 8 மில்லியன் வியூவர்சை எட்டியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
SUCESOS | Reventón de un depósito de vino de unos 50.000 litros en Bodegas VITIVINOS, de Villamalea pic.twitter.com/lU5pIzZAjU
— Radio Albacete (@RadioAlbacete) September 25, 2020