ரத்தம் உறைந்து இறந்தவர்கள்...! கொரோனா தடுப்பூசி போட்டதால் இந்நிலைமையா...?
- IndiaGlitz, [Thursday,April 08 2021]
கொரோனாவை தடுக்க தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உலகளவில் கொரோனாவின் தாக்கம் 2-ஆம் அலையாக உருவெடுத்து, பேரிழைப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும், ரத்தம் உறைந்து உயிரிழந்த சம்பவம் மனதை பதைபதைக்க வைத்துள்ளது.
உலகளவில் ஃபைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசிகள் தான், பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதைப்போலவே இந்தியாவில் கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக், சீனாவில் பல்வேறு தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளன. மேலும் பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் இத்தடுப்பூசியை போட்டவர்கள் சிலருக்கு ரத்தம் உறைந்து இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பிரிட்டனில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போடப்பட்டவர்கள் 79 நபர்களுக்கு ரத்தம் உறைந்துள்ளது. அதிலும் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.