ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை: குவியும் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Saturday,January 07 2023]
டெல்லியில் நடைபெற்ற தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறு கிராமத்தைச் சேர்ந்த மதி ரத்வா என்ற பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தங்கம் வென்று உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் நான் தங்கப் பதக்கம் வென்றது எனக்கு சிலிர்ப்பாக இருக்கிறது. பார்வை குறைபாடு உள்ள பிரிவில் ஈட்டி எறிதலில் நான் 15 மீட்டர் தூரத்தில் எறிந்தேன். இது என் மிகப்பெரிய சாதனை மற்றும் பெருமையாக கருதப்படுகிறது. எங்கள் பள்ளிக்கும் என் விளையாட்டு பயிற்சியாளருக்கும் எனது நன்றி.
சுரபி பார்வையற்றோர் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மதி சிறுவயது முதலே விளையாட்டில் சுறுசுறுப்பாக இருப்பது இருந்துள்ளார். இதனையடுத்து அவரிடம் உள்ள திறமையை கண்டு கொண்ட பள்ளி அவருக்காக ஒரு பயிற்சியாளரை அமர்த்தியது.
ஆரம்பத்தில் தனக்கு பயிற்சி மிகவும் கடுமையாக இருந்ததாகவும் ஆனால் தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி எனது மனநிலையை மாற்றி விட்டது என்றும் நான் மாவட்ட அளவில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற போது பள்ளி என்னை தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க ஊக்குவித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சர்வதேச போட்டிக்கு தயாராகி கொண்டிருக்கின்றேன் என்றும் நீரஜ் சோப்ரா தான் தனது தெய்வம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவரை இன்ஸ்டாகிராமில் நான் பின்தொடர தொடங்கினேன் என்றும் அவரைப்போலவே நானும் சர்வதேச போட்டிகளில் விளையாடி பதக்கங்களை வெல்வேன் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.