வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சூர்யா?

  • IndiaGlitz, [Monday,May 20 2019]

இயக்குனர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் இதுவரை 'சென்னை 600028 2' மற்றும் 'ஆர்.கே.நகர்' ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளது. இந்த நிலையில் இந்நிறுவனத்தின் மூன்றாம் தயாரிப்பு குறித்த தகவல் இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

பிளாக் டிக்கெட் கம்பெனியின் 3வது படம் ஒரு ஆச்சரிய அறிவிப்பாக இருக்கும் என்றும், இந்த படத்தின் தகவல்களை நந்த கோபாலன் குமரன் வெளியிடுவார் என்றும் அதாவது சூர்யா வெளியிடுவார் என்றும் வெங்கட்பிரபு அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சூர்யாவின் நடிப்பில் 'மாஸ் என்கிற மாசிலமணி' என்ற படத்தை இயக்கிய வெங்கட்பிரபு மீண்டும் அவர் நடிக்கும் படத்தை இயக்குவாரா? என்பதை 7 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் நீண்ட நாள் காலதாமதம் ஆகி வரும் 'ஆர்.கே.நகர்' திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்றும், சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.