பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆர்ஜேவா? அப்ப சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிந்த நிலையில் வரும் ஜூன் மாதம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களாக குக் வித் கோமாளி கனி, பவித்ரா மற்றும் சுனிதா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் மன்சூர்அலிகான், ராதாரவி உள்பட ஒருசிலரிடம் பிக்பாஸ் குழுவினர் பேசி வருவதாகவும், பாடகர்கள் அந்தோணிதாசன், என்ஜாய் என்ஜாமி பாடலை பாடிய தெருக்குரல் அறிவு, முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இனியன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி பிளாக்ஷீப் யூடியூப் சேனலில் ஆர்ஜே வினோத் இடம் நிகழ்ச்சி குழுவினர் பேசி வருவதாக கூறப்படுகிறது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்றும் டைமிங் காமெடி செய்வதில் இவர் வல்லவர் என்பதால் பிக்பாஸ் வீடே கலகலப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 

More News

'99 சாங்ஸ்' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மானின் கதையா? அவரே அளித்த விளக்கம்

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் எழுதி, இசை அமைத்து, தயாரித்த '99 சாங்ஸ்' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நதியாவுடன் 20 வயது மகள்: அக்கா தங்கச்சி போல இருக்காங்களே!

நடிகை நதியா தனது 20 வயது மகள் ஜனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி பதிவு செய்துள்ள புகைப்படங்களுக்கு நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

இந்தியில் பேசிய தொகுப்பாளினி: மேடையில் கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஏஆர் ரஹ்மான் அவர்கள் கதை எழுதி, தயாரித்து இசையமைத்த '99 சாங்ஸ்; என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீடு சமீபத்தில் நடந்தது. இந்த பாடல் வெளியீட்டின்போது தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதால்

மணமகள் தோற்றத்திற்கு தயாராகும் ஜூவாலா கட்டா: வைரல் புகைப்படங்கள்!

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தான் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும்

செங்கலை காட்டிய எதிர்க்கட்சிக்கு பதிலடி கொடுத்த தமிழக முதல்வர்!

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என கடந்த 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட்டில் அன்றைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்து இருந்தார்.