பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆர்ஜேவா? அப்ப சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிந்த நிலையில் வரும் ஜூன் மாதம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களாக குக் வித் கோமாளி கனி, பவித்ரா மற்றும் சுனிதா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் மன்சூர்அலிகான், ராதாரவி உள்பட ஒருசிலரிடம் பிக்பாஸ் குழுவினர் பேசி வருவதாகவும், பாடகர்கள் அந்தோணிதாசன், என்ஜாய் என்ஜாமி பாடலை பாடிய தெருக்குரல் அறிவு, முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இனியன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி பிளாக்ஷீப் யூடியூப் சேனலில் ஆர்ஜே வினோத் இடம் நிகழ்ச்சி குழுவினர் பேசி வருவதாக கூறப்படுகிறது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்றும் டைமிங் காமெடி செய்வதில் இவர் வல்லவர் என்பதால் பிக்பாஸ் வீடே கலகலப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.