ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.13,860 கோடி கருப்புப்பணம். அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Friday,December 02 2016]

கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பால் ஓரளவுக்கு கருப்புப்பண நடமாட்டம் குறைந்தாலும் முழுஅளவில் இன்னும் கருப்புப்பணம் வெளிவரவில்லை
இருப்பினும் வருமான வரித்துறையினர் அவ்வப்போது சோதனை நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் மகேஷ் ஷா என்ற ரியல் எஸ்டேட் அதிபர். வீடு மற்றும் அலுவலகங்களில் வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ 13, 860 கோடி ரூபாய் கருப்பு பணம் சிக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
வருமானவரித் துறையினர் சோதனையிட வருவது குறித்து தகவல் அறிந்தவுடன் மகேஷ் ஷா தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அகமதாபாத்தை தொடரந்து மும்பையிலும் அவருக்கு பலகோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகவும் விரைவில் மும்பையிலும் சோதனை செய்யவுள்ளதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More News

சூர்யாவின் 'எஸ் 3' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது...

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போல் ஆதார் அட்டை மூலம் பணப்பரிவர்த்தனை

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் தற்போது ஆன்லைனில் பணபரிவர்த்தனை செய்யப்பட்டு வருவது போல் விரைவில் ஆதார் அட்டை...

மாவீரன் கிட்டு - சாதி அநீதிக்கு எதிரான படம்

வசூல் வெற்றிப் படங்களையும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படங்களையும் கொடுத்துள்ள இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் ’மாவீரன் கிட்டு’ இன்றளவும் தீர்க்க முடியாத தீவிரமான பிரச்சனையாகவும் கடந்த நூற்றாண்டில் இப்போது இருப்பதை விட மிகத் தீவிரமாக இருந்த சாதிப் பிரச்சனையைப் பேசுகிறது

கேள்வி கேட்பதை சிவாஜியிடம் இருந்து தொடங்க வேண்டும். ராதிகா சரத்குமார்

கடந்த ஒரு வாரமாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் நடிகர் சங்க விவகாரம் குறித்த செய்திதான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

பணத்தட்டுப்பாடு பிரச்சனை. ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நாடாளுமன்றம் நோட்டீஸ்

ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் மாற்று ஏற்பாடாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளிவந்த போதிலும்...