ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.13,860 கோடி கருப்புப்பணம். அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Friday,December 02 2016]
கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பால் ஓரளவுக்கு கருப்புப்பண நடமாட்டம் குறைந்தாலும் முழுஅளவில் இன்னும் கருப்புப்பணம் வெளிவரவில்லை
இருப்பினும் வருமான வரித்துறையினர் அவ்வப்போது சோதனை நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் மகேஷ் ஷா என்ற ரியல் எஸ்டேட் அதிபர். வீடு மற்றும் அலுவலகங்களில் வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ 13, 860 கோடி ரூபாய் கருப்பு பணம் சிக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
வருமானவரித் துறையினர் சோதனையிட வருவது குறித்து தகவல் அறிந்தவுடன் மகேஷ் ஷா தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அகமதாபாத்தை தொடரந்து மும்பையிலும் அவருக்கு பலகோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகவும் விரைவில் மும்பையிலும் சோதனை செய்யவுள்ளதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.