சீக்கிரமே உலக அழகி பட்டத்தை வெல்வேன்-கருப்பு தமிழச்சி சான் ரேச்சல்
Send us your feedback to audioarticles@vaarta.com
மிஸ் பாண்டிச்சேரி,மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு,மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் என பல டைட்டில்களை வின் செய்து தற்போது பல விளம்பரங்களில் நடிக்கும் பாண்டிச்சேரியை பூர்விகமாக கொண்ட நிறுவனர் மற்றும் பிளாக் மாடல் சான் ரேச்சல் சமீபத்தில் அவள் க்ளிட்ஸ் யூடுயுப் சேனலில் அளித்த பேட்டியில்,
எம்.பி.எஸ் மற்றும் மாடலிங் இரண்டையும் தனது இரண்டு கண்களாக கொண்டு இருக்கும் ரேச்சல் சிறு வயதிலேயே தனது தாயாரை இழந்து விட்டார்.தன் தாய் இறப்பிற்கு பின்பு தான் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்தார்.அதில் இருந்தே தான் ஒரு புற்றுநோய் நிபுணராக உருவாக வேண்டும் என்ற கனவு லட்சியத்தோடு ஓடி கொண்டிருக்கும் ரேச்சல்,டாக்டர்க்கு படித்து கொண்டே மாடலிங் துறையிலும் நுழைந்தார்.
ஆனால் கருப்பாக இருக்கும் காரணத்தினால் ஆரம்பத்திலேயே பல அவமானங்களை கண்டார்.இதனால் அவரிடம் பேச தயங்கிய பலர்.கருப்பாக இருப்பது ஒரு குற்றமா?என எண்ணிய ரேச்சல்.இது போன்ற விமர்சனங்களை தனது சிறு வயதில் இருந்தே எதிர்கொண்டுள்ளார்.அதனாலயோ என்னவோ ரேச்சலை தனது கனவை நோக்கி நிற்காமால் ஓட வைத்தது.
இதை எல்லாம் தாண்டி தெரியாத துறைக்குள் வெறும் ஆர்வத்தை மட்டுமே வைத்து கொண்டு எப்படி நுழைவது என தெரியாமல் ஒரு காலத்தில் ரேச்சல் தவித்தார்.இருப்பினும் அவருக்கு இருக்கும் ஆர்வமே அவரை முதல் படியிலேயே மிஸ் டார்கெஸ்ட் குயின் என்ற பட்டத்தை வாங்கி கொடுத்தது.
தனது சொந்த ஊரிலேயே பல கேளிக்கைகளை எதிர்கொண்ட ரேச்சல் அந்த பெயரை கொண்டே மிஸ் பாண்டிச்சேரி பட்டத்தை வென்றது தனக்கு கிடைத்த பெருமை என கூறியுள்ளார்.இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் ரேச்சலை சப்போர்ட் செய்யும் பல பேர் இதே ரேச்சலை அவர்களுடைய நிறத்திற்காக தாழ்வாக விமர்சித்துள்ளனர்.
தான் கண்ட பல அவமானங்களுக்கு அர்த்தம் சேர்த்து வருகிறார் தன்னம்பிக்கை தாரகை ரேச்சல்.நான் இந்த இடத்திற்கு வர பல சிக்கல்களை தாண்டி வந்துள்ளேன்.நிறைய பயிற்சி எடுத்து உள்ளேன் என கூறியுள்ளார்.
தாய் இல்லையென்றாலும் தந்தை தூண்டுதலின் பெயரில் மாடலிங் துறையில் நுழைந்த ரேச்சல் உலக அழகி பட்டத்தை வெல்வதே தனது இலக்கு என கூறியுள்ளார்.நிறத்தை வைத்து என்னை அவமானப்படுத்தினாலும் என் கருப்பை வைத்து நான் சாதித்து காட்டுவேன் என கூறியுள்ளார்.
திறமைக்கு ஆர்வம் மட்டுமே போதும்.நிறம் தேவை இல்லை என்னை தவறாக பேசும் அந்த ஒரு சிலருக்கு என்னுடைய வெற்றியே சிறந்த பதிலாக இருக்கும்.பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து காட்ட வேண்டும் அவர்களுக்கு நிறம் ஒரு தடையாக இருக்க கூடாது மேலும் நான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் நினைத்தேன்.என கூறியுள்ளனர்.
ஆரம்பத்தில் பல இடையூறுகளை கண்ட ரேச்சல் என்ன தான் மாடலிங் துறையில் சாதித்தாலும் அவருக்கு சினிமா மீதோ அல்லது நடிப்பின் மீதோ பெரிதா ஆர்வம் இல்லை.அவரது ஒரே இலக்கு புற்றுநோய் நிபுணர் மற்றும் உலக அழகி பட்டம் மட்டுமே.அதை நோக்கியே ஓடி கொண்டுள்ளார்.எங்கு எப்போது ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியம் இல்லை நிற்காமல் நிறுத்தாமல் நமக்கு பிடித்த வேலையே செய்கிறோமா என்பதே கவனிக்கபட வேண்டிய விஷயம்.ஏதோ ஒரு வகையில் நமது இலக்கை அடைந்து விட்டால் நம்மை கணித்தவர்கள் தப்பாக பேசியவர்கள் எல்லாம் வியந்து பார்ப்பார்கள்.
ரேச்சல் போன்ற பெண் பல தடைகளை உடைத்து எரிந்து வரும்போது இது போல பல பெண்கள் தனது வாழ்க்கை இலக்கை நோக்கி ஒரு படி முன் செல்ல நல்லதொரு உந்துதலாக இருக்கும்,ரேச்சல் பேசிய பல ஊக்குவிக்கும் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments