கறுப்பினத்தவர் போராட்டத்துக்கு நன்கொடையை அள்ளிக் கொடுத்த ஜாம்பவான்!!! பாராட்டி மகிழும் ஊடகங்கள்!!!

  • IndiaGlitz, [Monday,June 29 2020]

 

உலகம் முழுவதும் இணைய ஊடகத்தில் மிகப்பெரிய ஜாம்பவனாகத் திகழும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ், அமெரிக்காவில் வலுவடைந்து வரும் நிறவெறிக்கு எதிரான போராட்டத்துக்கு அதிகளவிலான நன்கொடையை வழங்கி இருக்கிறார். இதற்குமுன் பல செயல்பாடுகளுக்கு இந்நிறுவனம் நன்கொடையை வழங்கியிருந்தாலும் தற்போது, உலகம் முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் இனவெறிக்கு எதிரான விவாதத்திற்கு எனக் குறிப்பிட்டு வழங்கியிருப்பது குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்நிறுவனம் இதற்கு முன் இவ்வளவு தொகையை நன்கொடையாக வழங்கியதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, ரீட் ஹேஸ்டிங்ஸ் மற்றும் அவரது மனைவியும் இணைந்து 120 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர். அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் அதிகமாகப் படிக்கும் ஸ்பெல்மேன் கல்லூரி, மோர்ஹவுஸ் கல்லூரி மற்றும் யுனைடெட் நீக்ரோ கல்லூரி உள்ளிட்ட மூன்று கல்லூரிகளுக்கு இடையே தலா 40 மில்லியன் டாலர்கள் விதம் பகிர்ந்து அளிக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகை மாணவர்களின் கல்விக்கு பயன்படும் என நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

நன்கொடை குறித்து “சமூக அக்கறையுடன் நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிரான மனநிலையை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அறக்கொடை” என அமெரிக்க ஊடகங்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரபல இணையத் திரை நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ். தற்போது இருக்கும் இணையத் திரை நிறுவனங்களில் நெட்ஃபிளிக்ஸ் தான் அதிக வருமானத்தை பெற்று வருகிறது. படங்கள் மற்றும் இணைய தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்து வழங்குவது, பிற தயாரிப்பாளர்களின் படைப்புகளை வெளியிடுவது என இந்நிறுவனம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட இணைய நிறுவனமாகவும் நெட்ஃபிளிக்ஸ் விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிபிஐக்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள்: முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து கிட்டத்தட்ட அனைத்து கோலிவுட் திரையுலக பிரமுகர்களும் கருத்து தெரிவித்துள்ள நிலையில்

ஊரடங்கு மட்டுமே கொரோனாவிற்கு தீர்வாகாது: மருத்துவ வல்லுநர் குழு பேட்டி

தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைவதால் சென்னை உள்பட தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பதற்கான ஆலோசனை இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.

இது உங்கள் டிவி ஷோ அல்ல, உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்: லட்சுமி ராமகிருஷ்ணனுடன் வனிதா மோதல்

பிக்பாஸ் வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டது குறித்த சர்ச்சை கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது

பெண்கள் பொறாமை கொண்டவர்கள், நான் ஆண்களை மட்டுமே நம்புவேன்: வனிதா

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்ததே

ராயப்பன் கேரக்டரில் விஜய் நடிக்க சுஷாந்த்சிங் தான் காரணம்: அர்ச்சனா கல்பாதி

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது