தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்று? எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக 5 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர்கள் தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதிலும் கொரோனா சிகிச்சையின்போது ஸ்டீராய்டு போன்ற மருந்துகளைப் பயன்படுத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் படு மோசமாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில் மியூகோர்மைசிஸ் எனும் பூஞ்சை தொற்று அவர்களைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது நோயாளிகளின் வாய், மூக்கு, கண் போன்ற பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி மேலும் மூளைக்குள் புகுந்து கொண்டு உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் மருத்துவர்கள் தொடர்ந்து கருப்பு பூஞ்சை தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிராவில் 52 பேர் உயிரிழந்தனர். மேலும் அந்த ஒரு மாநிலத்தில் மட்டும் 1,500 க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்பட்டது.
மகாராஷ்டிராவைத் தவிர கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, மபி போன்ற மாநிலங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கருப்பு பூஞ்சை தொற்று தற்போது தமிழகத்தில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழகச் சுகாதாரத்துறை சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேர் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட சில பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தலைவலி, கண்களில் வீக்கம், கன்னங்களில் வீக்கம், கண்-வாய் சுற்றி கறுப்பாக மாறிப்போதல், மந்தநிலை, கண்பார்வை இழப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிலும் கொரோனாவில் இருந்து மீண்ட நீரிழிவு நோயாளிகள் இந்த அறிகுறிகளோடு சேர்த்து ஆக்சிஜன் அளவை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com