தமிழகத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கருப்பு பூஞ்சை தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2700 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 148-ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசு சார்பாக இந்த பூஞ்சை தொற்றை தடுக்கும் நோக்கில், சிகிச்சையளிக்க கடந்த மே மாதம், 13 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது. இந்தக்குழுவினர் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தபின், கருப்பு பூஞ்சை குறித்த இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் மோகன் காமேஸ்வரன் கூறியிருப்பதாவது,
"கருப்பு பூஞ்சை தொற்றால் தமிழகத்தில் 2700 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தினசரி பாதிப்பு என்பது 20-க்கும் குறைந்துள்ளது. மக்களிடம் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டதே நோய் பாதிப்பு குறைவதற்கு காரணமாகும். நம் மாநிலத்தில் இறப்பு விகிதம் என்பது 6% -ஆக உள்ள நிலையில், 148 பேர் பலியாகியுள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், இந்த பூஞ்சை தொற்று அதிகம் இருப்பதாக செய்திகள் கூறுகிறது. இந்நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் மருத்துவமனைகளில் தனி சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் உருமாற்றம் அடையாது எனவும், விரைவில் இதை கட்டுப்படுத்தி விடுவோம் என்றும், தமிழகத்தில் பாதிப்பு மற்ற மாநிலங்களை விட குறைவாக இருப்பதாகவும்" அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout