ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் கருப்பு பூஞ்சை நோய் வருமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுக்கவே தற்போது கருப்பு பூஞ்சை தொற்று குறித்த பீதி ஏற்பட்டு உள்ளது. அதிலும் வெள்ளை, மஞ்சள் என கலர் கலராக தற்போது பூஞ்சை நோய்த்தொற்று பரவி வருவதால் மக்கள் மத்தியில் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மருத்துவமனைகளில் பயன்படுத்தும் ஆக்சிஜன் சிலிண்டர் குறித்த பயத்தையும் சிலர் வெளிப்படுத்தத் துவங்கிவிட்டனர்.
அதாவது மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்படும்போது சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் செயற்கையாகச் செலுத்தப்படுகிறது. இப்படி செலுத்தப்படும் ஆக்சிஜன் மருத்துவத் துறைக்கு என பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்கும். மேலும் சிலிண்டர்களில் இருந்து கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஆக்சிஜன் குளிர்ந்த தன்மையில் இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தற்போது அறிவுறுத்தி வருகின்றனர்.
காரணம் குளிர்ந்த தன்மைக் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்களில் பூஞ்சை தொற்றி இருக்கலாம். இதுவும் கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடும் என எச்சரித்து வருகின்றனர்.
அதோடு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் மருத்துவத் துறைக்கு என பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாம் தொழில் துறைகளுக்காக உருவாக்கப்பட்டது எனில் அவற்றின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியா முழுக்கவே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தொழில்துறை பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இப்படி செய்வதால் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க முடிகிறது.
மேலும் தொழில் துறைகளில் பயன்படுத்தும் ஆக்சிஜன் , மருத்துவத் துறைகளைப் போலவே 99.67% தூய்மையாக இருக்கின்றன. ஆனால் இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை. ஆக்சிஜன் ஏற்றப்படும் சிலிண்டர்கள்தான். தொழில்துறை சிலிண்டர்களில் பொதுவா மைக்ரோ அளவிற்கு கசிவு இருப்பதாகவும் தூய்மை இல்லாமல் இருப்பதாகவும் வட மாநிலங்களில் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தற்போது தொழில்துறை ஆக்சிஜன் சிலிண்டர்கள் அதிகளவில் பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் இவற்றின் தூய்மை கேள்விக்குறியாகி இருக்கிறது. இதில் இருந்து நீர் வெளியேறும்போதும், ஈரப்பதம் அதிகரிக்கும்போதும் பூஞ்சை தொற்றுவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே தொழில்துறை ஆக்சிஜன் சிலிண்டர்கள் குறித்து மருத்துவர்கள் தற்போது எச்சரித்து வருவதோடு அதன் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கத் துவங்கி விட்டனர்.
இதைத்தவிர சிலர் வீடுகளில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஜெனரேட்டர் மூலமும் ஆக்சிஜன் தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர். அதில் 100% தூய்மையான ஆக்சிஜன் கிடைக்காது என்றாலும் அவற்றில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதேபோல கடைகளில் இருந்து வாங்கிப் பயன்படுத்தும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தரம் மேம்பட்டதாக இருக்கிறதா என்பதை சரிப்பார்த்துக் கொள்வதும் அவசியம் என மருத்துவர்கள் அறிவுறித்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout