கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...? அதிலிருந்து பாதுகாப்பது எப்படி..?

  • IndiaGlitz, [Sunday,May 16 2021]

மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை தொற்று, நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், இந்த நோய் எளிதாக பரவி விடுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வருவதற்கு முன்பிலிருந்தே, நீரிழிவு நோயாளிகள், சீறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் கீமோதெரபி சிகிச்சை எடுப்பவர்களுக்கு, இந்த கருப்பு பூஞ்சை தொற்று எளிதில் பரவி விடுகிறது.

கருப்பு பூஞ்சை தொற்றின் அறிகுறிகள் என்னென்ன....?

1.கண்களும், சுற்றியுள்ள பகுதிகளில் வலி ஏற்படும், கண்கள் சிவந்து காணப்படும்

2.முகத்தில் தொடர்ந்து வலி ஏற்படும்

3.கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில், நிறம் மாறுவது

4.திடீரென பார்வை இழத்தல்

5.கண்கள் வீக்கமடைந்து காணப்படும்

6. கருவிழிகள் துருத்திக்கொண்டே இருக்கும்

7. கருவிழிகள் அசையாமல் இருக்கும்

8. கண் தசைகளுக்கு வலுவு தரக்கூடிய நரம்புகளில் செயலிழப்பு ஏற்படும்.

9. கருப்பு நிறத்தில் புண் ஏற்படும்

10.மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படும்.

11. மூக்கில் நீர் வடியும் அல்லது இரத்தம் வடியும்.

யாருக்கு இந்நோய் பரவுகிறது...?

கோவிட் தொற்று ஏற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவில் கட்டுப்பாடு இல்லாதபோது கருப்பு பூஞ்சை நோய் எளிதில் தொற்றிக்கொள்கிறது.

கொரோனாவிலிருந்து குணமடைந்து, சிகிச்சை பெறும் குறிப்பிட்ட சில நபர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதும் இந்த குறைபாடு ஏற்படுகிறது.

கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்கள், அதிக மருந்துகள் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்கள் தீவிர சிகிச்சை எடுத்துவருவதால், கணையத்தில் பாதிப்பும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகமாக இருக்கும். இக்காரணங்களால் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது.

சிகிச்சை பெறுவது எப்படி..?

கருப்பு பூஞ்சை நோயை ஆரம்பத்திலே கண்டறிந்தால், குணப்படுத்தலாம். காது, தொண்டை, கழுத்து (ENT) சிறப்பு மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவ நிபுணர்களை அணுகினால், உரிய நெறிமுறைகளுடன் சிகிச்சை அளிக்கப்படும்.

கருப்பு பூஞ்சை நோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி..?

சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்தல், மருத்துவர் பரிந்துரை செய்த உணவுமுறையை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.
தினமும் உங்கள் சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும்.

தாங்களே சுய மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது. மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளவோ, நிறுத்தவோ கூடாது.

சர்க்கரை நோயாளிகள் உட்பட, மேலே குறிப்பிட்டுள்ள நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளி, சானிடைசர் பயன்படுத்துவது, அடிக்கடி கைகழுவுதல் கட்டாயமாகும்.

 

More News

கொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது.....! தடை விதித்த அரசு...!

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டில்,  தனிமைப்படுத்தி  இருக்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா: 6 போட்டியாளர்களுக்கு பாசிட்டிவ் என தகவல்!

பிக்பாஸ் தமிழ் போலவே கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த சில வாரங்களாக மலையாளம் மற்றும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி

அது கங்கை அல்ல, நைஜீரியா நதி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத்!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சையை கிளப்பி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கங்கையில் பிணங்கள்

எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, நான் மட்டும் சோட்டாபீம் பார்த்துகிட்டு இருக்கேன்: புலம்பும் பிக்பாஸ் ரன்னர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் ஆக வந்த பிரபலம் ஒருவர் தனது நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் பிறந்து விட்டார்கள், ஆனால் தனக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகாமல் சோட்டாபீம்

கொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை!

தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிதாக பதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து