கருப்பு-சிகப்பு ரோஜாக்களுக்கு கமல் கொடுத்த விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு கருப்பு ரோஜாவும், ஒரு சிகப்பு ரோஜாவும் வழங்கப்பட்டது. தங்களுக்கு பிடித்தவர்களுக்கு சிகப்பு ரோஜாவையும் பிடிக்காதவர்களுக்கு கருப்பு ரோஜாவையும் வழங்க வேண்டும் என்று கமல் கூறினார்.
இதில் ஷாரிக் இரண்டு கருப்பு ரோஜாக்களையும், பாலாஜி மூன்று கருப்பு ரோஜாக்களைப் பெற்றார். சிகப்பு ரோஜாக்களை அதிகபட்சமாக நித்யா பெற்றார் என்பது ஆச்சரியமான ஒரு செய்தி. அதேபோல் ரித்விகாவுக்கு எந்த ரோஜாவும் கிடைக்கவில்லை. அதனால் 'நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்று கமல் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் அனைவரும் ஏற்று கொள்ளும் வகையில் இருந்தது. மேலும் சிகப்பு ரோஜாக்கள் உங்களுடைய நல்ல எண்ணங்களை பிரதிபலிக்கும் என்றும் கருப்பு ரோஜா உங்கள் குறைகளை எடுத்து காட்டும் என்றும், உண்மையில் இந்த கருப்பு ரோஜாதான் முக்கியமானது என்றும் கமல் விளக்கம் அளித்தார்.
அதேபோல் நேற்றைய நிகழ்ச்சியில் ஜனனி, நித்யா, வைஷ்னவி ஆகிய மூவரில் சிறந்த தலைவர் யார்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதில் ஜனனி, நித்யா, வைஷ்ணவி என போட்டியாளர்கள் வரிசைப்படுத்தினர். பார்வையாளர்களின் எண்ணமும் அதுதான். ஆனால் பிக்பாஸின் தரவரிசை அப்படி நேரெதிராக இருந்தது ஏன்? என்பது புதிராக உள்ளது.
மேலும் நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் எவிக்சன் பட்டியலில் இருந்து மும்தாஜ் காப்பாற்றப்பட்டுள்ளார். சென்ற வாரமும் மும்தாஜ் காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. மீதியுள்ள நித்யா, பொன்னம்பலம், அனந்த், பாலாஜி ஆகிய நால்வரில் வெளியேறுவது யார் என்று இன்று தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout