வெற்றிக் களிப்பில் வங்கத்துச் சிங்கம் மம்தா பானர்ஜி… மேற்கு வங்கத் தேர்தல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மேற்கு வங்கச் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 216 இடங்களில் ஏகபோக வெற்றிப்பெற்றுள்ளது. மேலும் பாஜக 75 இடங்களிலும் மற்றவை ஒரு சில இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன.
ஆனால் இந்த ஏகபோக வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சற்று சோர்வடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்து இருக்கிறார். இதற்கு காரணம் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய சுவேந்து அதிகாரி என்பவர் பாஜகவில் இணைந்தார்.
அதோடு முடிந்தால் நந்திகிராம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் என்றும் மம்தாவிடம் சவால் விட்டு இருந்தார். இதனால் வழக்கமாக போட்டியிடும் தொகுதியை விடுத்துவிட்டு மம்தா நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியை எதிர்த்துப் போட்டியிட வேண்டி இருந்தது.
இந்நிலையில் நந்திகிராம் தொகுதியில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டபோது பின்னடவை சந்தித்த மம்தா தொடர்ந்து மதியம் தொட்டு முன்னிலை பெற்றார். ஒருகட்டத்தில் மம்தா வெற்றிப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை கடைசி ஒரு சில நிமிடங்களில் சுவேந்து அதிகாரி வெற்றிப் பெற்றதாகவும் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததாகவும் தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்தத் தோல்வியை அடுத்து மம்தா பானர்ஜி தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீதிமன்றத்தை நாடுவேன். ஏனென்றால் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சில சம்பவங்கள் நடைபெற்றன. அவற்றை நான் வெறிப்படுத்துவன் என்றும் கூறியிருக்கிறார். இந்தியா முழுக்க நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் மிகவும் ஈர்க்கப்பட்ட ஒரு தேர்தலாக மேற்கு வங்கத்தேர்தல் பார்க்கப்பட்டது. காரணம் மோடியா? மம்தாவா என்ற நேரடியான தாக்குதல் இந்த மாநிலத்தில் நிலவியது.
இதனால் மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற போட்டி இந்தியா முழுக்கவே மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில் திரிணாமுல் கட்சி அறுதிப் பெரும்பான்மையான வெற்றியைப் பெற்று பாஜகவிற்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் திரிணாமுல் கட்சி மேற்கு வங்கத்தில் ஒரு நிலையான ஆட்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அக்கட்சி தற்போது மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout