முன்னாள் காக்கி, இந்நாள் சங்கி....! அண்ணாமலை குறித்து பாஜகவினர் நக்கல் பேச்சு....!

அமித் ஷா பெரிய சங்கி, அண்ணாமலை சின்ன சங்கி என்ற பாஜகி நிர்வாகி பொதுவெளியில் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழகத்தின் பாஜக தலைவராக அண்ணாமலையை நியமித்துள்ளது ஒன்றிய அரசு. வருகின்ற ஜூலை 16-ஆம் தேதி சென்னையில் உள்ள கமலாலயத்தில், மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ளார் அண்ணாமலை. இதனால் சென்னைக்கு செல்ல, கோவையிலிருந்து யாத்திரை போல கிளம்ப, வழியெங்கும் இவருக்கு பாஜக தொண்டர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில், அண்ணாமலையை வரவேற்கும் விதத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் பேசியிருப்பதாவது,

பெரிய சங்கியான அமித்ஷாவின் புதிய கண்டுபிடிப்புதான் சின்ன சங்கி அண்ணாமலை. திராவிட கும்பலில் இருந்து தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கவேண்டுமென்றால், அண்ணாமலை முதல்வர் ஆக வேண்டும், இதுவே விதி ஆகும். முன்னாள் காக்கி, இந்நாள் சங்கியான அண்ணாமலையை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கிண்டலடிக்கும் வகையில் பேசியுள்ளார். இவர் இப்படி எதுகை மோனையாக பேசியது, சிலருக்கு நகைச்சுவை உணர்வை தந்தாலும், பலரை முகம் சுழிக்க செய்திருக்கிறது.