ஜார்கண்டில் பாஜக வேட்பாளராக நிற்க மறுத்ததால், விளையாட்டில் ஒதுக்கப்படுகிறாரா தோனி..?!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகக்கோப்பை அரையிறுதி கிரிக்கெட்டுக்கு பிறகு ராணுவ பயிற்சிக்கு சென்ற மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டரா அல்லது ஓய்வு அறிவித்துவிடுவாரோ என்று ரசிகர்கள் எப்போதும் கவலையில் உறைந்திருக்கிறார்கள். ஆனால் இது வரையில் அவரது ஓய்வு தொடர்பாக அவரோ, கிரிக்கெட் சங்கமோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இருப்பினும், உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு நடைபெற்ற எந்த கிரிக்கெட் தொடர்களிலும் தோனி இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர். இப்படி இருக்கையில், பிசிசிஐ ஜனவரி 16 வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலிலும் தோனி பெயர் இடம்பெறவில்லை. இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாததற்கு பா.ஜ.க-வே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்கிரஸைச் சேர்ந்த கவுரவ் பந்தி என்பவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “அண்மையில் நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலில் தோனியை வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. ஏனெனில் தோனியின் சொந்த மாநிலம் ஜார்க்கண்ட் என்பதால் பா.ஜ.க அவ்வாறு வியூகம் வகுத்தது. ஆனால் அதற்கு தோனி மறுத்திருந்தார். அதேபோல பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவும் தோனி மறுத்திருந்தார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
ஆகையால் அதற்கு பழிவாங்கும் விதமாக தோனியை இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டுவதற்காக பா.ஜ.க செயல்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறையிலும் தனக்கு உரியவர்களை நியமித்து காரியத்தை சாதித்துக்கொள்வதில் பாஜக திறம்பட செயல்படும். அது போல பிசிசிஐயின் செயலாளராக உள்ள அமித்ஷாவின் மகன் ஜே ஷா மூலம் தோனியை பழிவாங்கும் படலத்தில் பாஜக இறக்கியுள்ளதா என்ற யூகம் தவிர்க்க முடியாத ஒன்று.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout