நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக இளைஞரணி தீர்மானம்: காரணம் இதுதான்!
- IndiaGlitz, [Sunday,July 04 2021]
நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக இளைஞரணி தீர்மானம் இயற்றி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்ட வரைவுக்கு கண்டனம் தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்தார். இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சூர்யாவை தொடர்ந்து கார்த்தி, விஷால், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், ராஜூமுருகன், பூச்சி முருகன் உள்பட பலர் புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
ஏற்கனவே நடிகர் சூர்யா மத்திய அரசு கொண்டு புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு உள்பட பல மத்திய அரசின் திட்டங்களுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வு, ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டவரைவு ஆகிவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.